Pages

Monday, December 30, 2013

ஒற்றைப் புத்தகத்தில் நெடுந்தீவின் அத்தனை அழகையும் புதைத்த கலைஞன்

யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்களில் ஒருவரான சுஜிவன் தர்மரத்தினம் என்ற சகோதரர் சில மாதங்களுக்கு முன்னர் என் கண் வழியே நெடுந்தீவு --- எனும் மின்நூலினை பார்வைக்கு வைத்திருந்தார்.
அங்கு போய் நேரே பார்த்த போது இருந்த அதே அழகு உணர்வை அப்படங்கள் அள்ளித் தெளித்திருந்தது.
 அடுத்து வர இருக்கும் அவரது
1.உழவன்
2.கடல் பயணம்
தொகுப்பிற்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் சகோ
 


தரவிறக்கி பார்வையிட இங்கே சொடுக்குங்கள்

Thursday, December 12, 2013

கைப்பேசியில் ஒரு புரட்சிப்படம் “சிறகு விரிக்க“

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நான் எதிர்பார்த்தது போலவே கைப்பேசிக் குறும்படப் புரட்சிகள் ஆரம்பித்து விட்டது. அதற்காக இதற்கு முன்னர் இல்லை என்றில்லை ஆனால் ஒரு சில தற்துணிவுள்ளவர்களாலேயே மட்டுமே வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருந்த இடத்தில் திறமை இருந்தும் பண வசதிகள் போதாமையாக இருந்த பலர் துணிந்தெழுந்து விட்டார்கள். இதற்கு முன்னரும் mrtc மாணவர்களால் நல்ல குறும்படங்கள் கைப்பேசியில் படைக்கப்பட்டிருந்தாலும் ஒரு வட்டத்தோடு சுருங்கிப் போயிருந்தது. அண்மையில் சகோதரன் Steephan Sansigan தனது கைப்பேசியில் எடுத்த குறும்படம் ஒன்றை பார்வைக்கு விட்டிருக்கறார். குறும்படம் என்றால் என்ன என்ற சரியான வரையறைக்குட்பட்ட படமாக என்னை அது கவர்ந்திருந்தது. “சிறகு விரிக்க“ என்ற ஒரு சின்னத் தலைப்பு கதையும் மிக மிகச் சின்னது ஆனால் அது சொல்ல வந்த கருத்து மிகப் பெரியது. ஒரு சிறுவன் ஒரு இளைஞன் ( Naveenan Sritharan ) இருவருக்குள்ளும் நடக்கும் சின்னச் சம்பவம் இது தான் கருப் பொருள். அதிலும் கமரா கையாண்ட ஒரு இடத்தில் தான் அவரிடம் திறமை இருக்கென்று முழுப் புள்ளிகளையும் நான் அள்ளி வழங்கிய இடமாகும்.
அந்தச் சிறுவன் றப்பர் பாண்டில் (இழுவை நாடா) கல்லை இழுத்து வைத்திருக்கிறான். கையின் ஒருபுறம் இருந்து மறுபுறத்துக்கு pan ஆகும் கைப்பேசிக் கமரா அவன் இலக்குப் புள்ளியைம் கடந்து போகிறது. அவன் கல்லை நழுவ விட்டால் கமரா தொலைந்தான். நான் சாதாரண படமாக நினைத்துப் பார்த்த போது என் கண்ணோட்டத்தை மாற்ற வைத்த இடமது.
அக் குழுவிற்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு திருந்தம் செய்திருக்கலாம் என சொல்ல தோன்றிய இடம் 4 நிமிடமில்லாமல் இன்னும் கொஞ்சம் நேரத்தை குறைத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றியது.
ஆனால் சொல்ல வந்த கருப் பொருளுக்காக இருகர வரவேற்புக்கள்.